Adirai pirai
exclusive உள்ளூர் செய்திகள்

ஆதரவற்ற முதியவர் உடலை அடக்கம் செய்த அதிரை இளைஞர்கள்!

அதிரை பேருந்து நிலையத்தில் நேற்றைய தினம் உடல் நிலை பாதிக்கபட்ட நிலையில் பேருந்து நிலையத்தில் இருந்த ஒரு முதியவரைக்கண்ட பொதுமக்கள் காவல்நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்து அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் இன்று காலை அந்த முதியவர் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். தகவலறிந்த அதிரை சி.பி.டி உறுப்பினர்கள் ஆரிஃப், அஃப்ரித், இம்ரான் ஆகியவர்கள் அந்த முதியவரின் உடலை பைத்துல்மால் அம்புலன்ஸ் முலம் எடுத்து சென்று வண்டிப்பேட்டை இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.