Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அச்சுறுத்தும் டெங்கு – அதிரையில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலில் பாதிக்கபட்டவர்கள் தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு அதிரையும் டெங்கு காய்ச்சலால் பெரும் பாதிப்புக்கு ஆளானது.

அதிரையில் தற்சமயம் மழை மத்றும் குளிர் சூழ்திருப்பதால் மக்களுக்கு பல வகையில் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதில் இருந்து தற்காத்து கொள்ள நேற்று 23.10.2018 திங்கள்கிழமை பேரூராட்சி ஊழியர்களால் கடற்கரை தெரு பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கு பருகினர். இது தொடர்ந்து அதிரையின் பிற பகுதிகளிலும் இது போன்று வழங்க உள்ளனர்.