Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையை அச்சுறுத்தும் புற்றுநோயை தடுக்க இலவச முகாம்!

அமைதியும் ஆரோக்கியமும் செழித்துத்திகழும் அதிரையில் உயிர்க்கொல்லி நோயான புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும்; இக்கொடிய யால், நமது உற்றத்திலும் சுற்றத்திலும் உள்ள பல சகோதர சகோதரிகள் விலைமதிக்க முடியாத நமது இன்னுயிரை இழப்பதும்; நமது அனைவரையும் மிகுந்தகவலையிலும் பெரும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இந்த அபாயகரமான நிலையிலிருந்து நமது மக்களை முடிந்த அளவு மீட்டு எடுக்கும் முயற்சியாக அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் தஞ்சாவூர் கேன்சர் சென்டர் இணைந்து நடத்தும் புற்றுநோய் கண்டறிதல் முகாம் வரும் (2610-2018) (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் ல் நடைபெற உள்ளது.