Adirai pirai
தமிழகம்

பொய்யான குற்றச்சாட்டு – ஆசிஃபி பிரியாணியை சூளும் சதிகள்!

1999ம் ஆண்டில் தள்ளு வண்டியில் தனது பிரியாணி வியாபாரத்தை ஆரம்பித்த ஆசிஃப் என்பவர் இன்று சென்னையில் அசைக்க முடியாத அளவிற்கு பிரியாணி தொழிலில் கொடிகட்டி பறக்கிறார்.

தரத்திற்கும்,சுவைக்கும் ஆசிஃப் கொடுத்த முக்கியத்துவம்தான் அவரை தொழிலில் இந்தளவிற்கு உயர்த்தியுள்ளது.மேலும் பல இடங்களில் ஆசிஃப் தனது கிளைகளை நிறுவியுள்ளார் என்பதும் சென்னை மக்கள் நன்கறிவார்கள்.

சமீபத்தில் இவரது கடைகளுக்கு சோதனை செய்த அரசாங்க அதிகாரிகள்..

உணவு சமைப்பவர் ஏன் ஷூ போடவில்லை?

விறகு கட்டைகளை கீழே போடக்கூடாது!

தண்ணீர் வரும் அந்த குழாய் ஏன் பழுமடைந்துள்ளது?

போன்ற உப்பு சப்பில்லாத கேள்விகளை கேட்டு அவரது கடைக்கு சீல் போட்டுள்ளனர்.

இது நடந்த அன்றைய தினமே ஏதோ ஒரு பகுதியில் 2000 கிலோ வீணான இறைச்சிகள் கைப்பற்றிய செய்தியினை இதனோடு சேர்த்து விசக்கிருமிகள் சிலர் சமூக வளைதலங்களில் பரப்பி வந்தனர்.

இதனால் கடும் மன உளைச்சலுக்காளான அதன் உரிமையாளர் ஆசிஃப் உடனே மீடியாக்களை அழைத்து….

“என் தொழிலை அழிப்பதற்கான சதிகள் நடக்கிறது.இதற்கு பின்னால் உள்ளவர்கள் யார் என்பதை அறிய முடியவில்லை. பூண்டின் ஒரு பகுதி கருப்பானால்கூட அதை சமைக்க பயன்படுத்தாத என் மீது இல்லாத குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள்.

எந்த கேள்வியை யார் கேட்டாலும் அதற்கு பதிலளிக்க நான் தயார்.உணவு தயாரிப்பின் சுகாதார விசயத்தில் நூறு சதவிகிதம் சரியாகதான் செயல்பாடுகள் உள்ளது என்பதை நான் ஆதாரத்துடன் நிரூபிப்பேன்.

நானும், எனது தொழிலும், இதனை நம்பி வாழும் 1500 குடும்பங்களும் இப்போது ஸ்தம்பித்துபோய் நிற்கின்றோம். இந்த சமயத்தில் மக்களாகிய நீங்கள் எங்களுக்கு துணையாக நில்லுங்கள்” என்ற இவரது கள்ளங்கபடமற்ற பேட்டி பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது.

அதனால் மக்களே! ஒரு சாமானியனின் வளர்ச்சியினை கண்டு காழ்ப்புணர்ச்சி கொண்ட யாரோதான் இதுபோன்ற கீழ்தரமான காரியங்களை செய்கிறார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது.

விசக்கிருமிகளால் பரப்பப்படும் பொய்யான செய்திகளை நம்பாமல் நாம் இந்த உண்மை செய்திகளை அறிந்து ஆசிஃப்க்கு ஆதரவாக துணை நிற்போம்!

அநீதி தோற்கட்டும்!

அறம் வெல்லட்டும்!

-சையத் அமீர்