Adirai pirai
FLASH NEWS posts உள்ளூர் செய்திகள்

அதிரையில் தரமற்ற புதிய தார் சாலை சேதம்! (Exclusive)

அதிரை சேர்மன் வாடி – நடுத்தெரு – கீழத்தெரு – EC சாலையில் இணையும் புதிய தார் சாலை சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் கடந்த செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்டது.

பல ஆண்டுகளுக்கு பின் அமைக்கப்பட்ட இந்த சாலை மக்களை ஏமாற்றி விட்டது என்று தான் கூற வேண்டும்.

கீழத்தெரு பகுதியில் இருந்து ECR இணைக்கும் சாலையின் சில இடங்கள் சாலை உடைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாலை அமைத்து ஒரு மாதம் கூட பூர்த்தியாகாத நிலையில் இப்படி நிகழ்ந்திருப்பது தரமற்ற சாலை என்பதனை பறைசாற்றியுள்ளது.

இந்த சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதா? அப்படி அமைக்கப்பட்ட சாலையை அதிகாரிகள் அங்கீகரித்தது ஏன்? இதில் பயன்படுத்திய பொருட்கள் குறைந்த தரத்தில் இருந்தது ஓர் காரணமா? என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.

இது குறித்து சம்பந்தபட்டவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.