Adirai pirai
exclusive FLASH NEWS தமிழகம்

பட்டுக்கோட்டை அருகே இளைஞன் வெட்டி கொலை?

பிரகாஷ் என்கிற இளைஞர் இன்று காலை வெட்டி கொலை செய்யப்பட்டார்.

பட்டுக்கோட்டையை சேர்ந்த பிரகாஷ் (24) என்ற இளைஞர் ஒரு வழக்கில் சம்பந்தபட்டுள்ளார். அதனால் அவரும் அவரது கூட்டாளிகளும் இன்று காலை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

பின்னர் சாலையில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வெடியை பயன்படுத்தி புகையை ஏற்படுத்தியதன் மூலம் அந்த இடம் புகை மண்டலம் போல காட்சியளித்துள்ளது. இதனை பயன்படுத்தி பிரகாஷை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.

உடலை ஆலடிக்குமுலையிலும், தலையை பாளையத்திலும் வீசி சென்றுள்ளனர். இந்த கொலைக்கு முன் விரோதம் காரணமாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட பிரகாஷின் உடல் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.