Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் நடைபெற்ற புற்றுநோய் கண்டறிதல் முகாம்!

அமைதியும் ஆரோக்கியமும் செழித்துத்திகழும் அதிரையில் உயிர்க்கொல்லி நோயான புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும்; இக்கொடிய யால், நமது உற்றத்திலும் சுற்றத்திலும் உள்ள பல சகோதர சகோதரிகள் விலைமதிக்க முடியாத நமது இன்னுயிரை இழப்பதும்; நமது அனைவரையும் மிகுந்தகவலையிலும் பெரும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இந்த அபாயகரமான நிலையிலிருந்து நமது மக்களை முடிந்த அளவு மீட்டு எடுக்கும் முயற்சியாக அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் தஞ்சாவூர் கேன்சர் சென்டர் இணைந்து அதிரை பைத்துல்மால் வளாகத்தில் புற்றுநோய் கண்டறிதல் முகாம் இன்று (2610-2018) (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.