Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையில் டெங்கு தடுப்பு பணி தீவிரம்.!

அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் சார்பில் அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இன்று 26.10.2018 நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

அதிரையில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான பேரூந்து நிலையம், பழஞ்செட்டி தெரு, கரையூர் தெரு, சேர்மன்வாடி, சில ஜும்மா பள்ளிகளிலும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் பயனடைந்தனர்.