Adirai pirai
education and jobs exclusive posts உள்ளூர் செய்திகள்

மருத்துவப்படிப்பில் பல்கலைக்கழக அளவில் 3ம் இடம் பிடித்த அதிரை முஹைதீன்!

அதிரை சிஎம்பி லேன் பகுதியை சேர்ந்தவர் அஹமது முஹைதீன். சென்னை வெங்கடேஷ்வரா ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் 2012-18 வரை BHMS ஹோமியோபதி மருத்துவ படிப்பை படித்து முடித்தார். அதில் பல்கலைக்கழக அளவில் (மாநில் அளவில்) 3ம் இடம் பிடித்து முஹைதீன் அசத்தியுள்ளார். இவருக்கு கல்லூரியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் காசோலை மற்றும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தற்போது MD ஹோமியோபதியில் குழந்தைகள் நலன் சார்ந்த மேற்படிப்பை குலசேகரத்தில் உள்ள சாரதா கிருஷ்ணா கல்லூரியில் படித்து வருகிறார். இடைப்பட்ட விடுமுறை காலத்தில் சிஎம்பி லேனில் உள்ள தன்னுடைய வீட்டில் மருத்துவ ஆலோசனை வழங்கி வருகிறார் முஹைதீன்.

மேற்படிப்பிற்கான நீட் தேர்வில் மாநில அளவில் 3ம் இடத்தையும் இவர் பிடித்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.