Adirai pirai
exclusive FLASH NEWS உள்ளூர் செய்திகள்

மறைந்த அதிரை ஹனீபா அவர்களின் குடும்பத்தாருக்கு SDPI மாநில தலைவர் அனுதாபம்!

அதிரையில் நேற்றிரவு காலமான முஹம்மது ஹனீபா அவர்களுக்கு ஷோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா வின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் அனுதாபத்தை பகிர்ந்து கொண்டார்.

நெல்லை முபாரக் இது குறித்து அவரது சமூக வளையதளத்தில் பகிர்ந்து கொண்ட செய்தி:

SDPI கட்சியின் துவக்க காலத்தில் தஞ்சை மாவட்டம் அதிராமபட்டினம் பேரூராட்சியின் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவராக இருந்த ஆற்றல் மிகுந்த கட்சியின் செயல்வீரர் ஹாஜி அ.மு.க. முகமது ஹனீபா (வயது 85) அவர்கள் நேற்று இரவு இவ்வுலகைவிட்டு மறைந்த செய்தி அறிந்தேன். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.)

அன்னாரின் மறுமை வாழ்வு சிறப்பானதாக அமைய நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

சகோ. ஹாஜி அ.மு.க. முகமது ஹனீபா அவர்களின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவருடைய அனுதாபத்தை பதிவு செய்துள்ளார்.