Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையில் புதிய தார் சாலை சீர் செய்யப்பட்டது !

அதிரை சேர்மன் வாடி – நடுத்தெரு – கீழத்தெரு – EC சாலையில் இணையும் புதிய தார் சாலை சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் கடந்த செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்டது.

கீழத்தெரு பகுதியில் இருந்து ECR இணைக்கும் சாலையின் சில இடங்கள் சாலை உடைந்து இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னால் செய்தி வெளியிட்டிருந்தோம்.

பழுதடைந்த தார் சாலை:

உடைந்து கிடந்த சாலை சரி செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும். சாலை அமைத்து ஒரு மாதத்திலே இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருப்பதும், இந்த சாலையின் ஆயுட்காலம் குறைவாகவே இருக்கும் என்பதை காட்டுகின்றது.

தாமதமின்றி விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.