Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரை செக்கடி குளத்தினை வந்தடைந்த ஆற்றுநீர்.!

அதிரை குளங்கள் பல மாதங்களாக நீரின்றி காணப்பட்ட நிலையில், இதற்காக நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை என்ற ஓர் அமைப்பு உருவாக்கியதுடன் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக தொக்காளிகாடு அணையில் இருந்து பம்பிங் மூலம் நீர் கொண்டு வருவது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.

இன்று அதிரையின் நீர்மட்டம் குறைந்து கொண்டு இருக்கும் சூழலில். அதிரை பேரூராட்சி சார்பில் நசூனி ஆற்றில் இருந்து பம்பிங் நீர் கொண்டு வரப்பட்டு ஆலடி குளத்திற்கு நீர் நிரப்பப்பட்டு வந்த நிலையில் மோட்டார் பழுதடைந்த தால் தடைபட்டு போனதாக கூறப்பட்டது.

தற்போது மோட்டார் சரி செய்யப்பட்டுள்ள நிலையில் ஆலடி மற்றும் செக்கடி குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டடுள்ளது. தண்ணீர் வரத்தின் அளவு சற்று குறைந்தே காணப்படுகின்றது.