Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரை வெட்டி குளம் நிரம்பியது.!

அதிரை குளங்கள் பல மாதங்களாக நீரின்றி காணப்பட்ட நிலையில் இதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளபட்டது.

கடற்கரை தெரு வெட்டி குளம் சில மாதங்களுக்கு முன்னால் சுமார் ₹15 லட்சம் செலவில் தூர் வாரப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் வேலைகள் நிறைவடைந்த சில காலத்திலாயே பல முயற்சிகளுக்கு பிறகு தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

தற்சமயம் குளம் நிரம்பி காண்போர் கண்களுக்கு அழகாய் காட்சியளிக்கின்றது.