Adirai pirai
Alert உள்ளூர் செய்திகள்

அதிரை ஹாஜா நகரில் வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர்… பொதுமக்கள் அவதி!

அதிரையில் கடற்கரைத்தெரு, ஹாஜா நகர் பகுதிகளில் ஆண்டுக்கணக்கில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாததாலும், பராமரிப்பு குறைபாடு காரணமாகவும் கழிவு நீர் வீதிகளுக்கு வெளியேறி வந்தது. இது குறித்து மக்கள் பல முறை பேரூராட்சி அலுவலகம் சென்று புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. செவிடன் காதில் சங்கு ஊதியது போல் உள்ளது பேரூராட்சி.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிரையில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் அதிரை ECR ரயிலடி ரோட்டில் ஹாஜா நகரில் வாய்க்காலை சுத்தம் செய்யாததால் கழிவு நீர் குடியிருப்புக்குள் புகுந்துவிட்டது. ஆரம்பக்கட்ட இந்த மழைக்கே இந்த நிலை என்றால் கனமழை பெய்யும் போது என்ன நடக்குமோ என்ற அச்சம் மக்களை தொற்றிக்கொண்டுள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இனிவரும் மழையால் கழிவு நீர் குடியிருப்புக்குள் புகுந்து குடி நீருடன் கலந்து தொற்று நோய் பரவாமல் பாதுகாக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.