Adirai pirai
Alert உள்ளூர் செய்திகள்

அதிரை தரகர் தெருவில் நிலவும் சுகாதார சீர்கேடு!

அதிரை தரகர் தெரு முஹைதீன் ஜும்மா பள்ளி அருகே தொடர்ந்து கொட்டப்படும் குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளன. இதன் காரணமாக அப்பகுதியில் கொசுத்தொல்லையும், துர்நாற்றமும் அதிகரித்துள்ளது. தற்போது மழைபெய்து வருவதால் குப்பைகளில், பாலிதீன் பைகளில் மழை நீர் தேங்குகின்றன. இதனால் நிலத்தடி நீர் பூமிக்கு செல்வது தடைப்படுவதுடன், தண்ணீர் தேங்கி அதன் மூலம் கொசு உற்பத்தியாகி கொடிய நோய் பரவும் அபாயம் எழுந்துள்ளது. இதனை பேரூராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.