Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையில் சாலை மறியல் – நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை.!

அதிரையில் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை நடத்திய ஆலோசனை கூட்டம் இன்று செவ்வாய்கிழமை மஹ்ரிப் தொழுகைக்கு பின் 06.11.2018 அயிஷா மகளிர் அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் குளங்களுக்கு நீர் கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக ஐநூறுக்கும் அதிகமான மக்களை திரட்டி மனு அளிக்கப்பட்டது.

இருந்தும் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டவில்லை. குளங்களுக்கு நீர் நிரப்பி தருவதாக கூறிய அதிகாரிகளின் வாக்குறுதி, வாக்குறுதியாகவே இருக்கின்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து வருகின்ற 14.11.2018 ல் அதிரை ECசாலையை மறியல் செய்ய தீர்மானித்துள்ளனர்.