Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரை மக்களை காவு வாங்க காத்திருக்கிறதா பேரூராட்சி.?

அதிரை பேருந்து நிலையம் பின்புறம் கடைத்தெரு செல்லும் சாலையோரம் கழிவு நீர் தேங்கியபடி ஒரு பெரிய கழிவுநீர் தேங்கும் பள்ளம் இருந்தது.

பல வருடங்களாக பேரூராட்சி நிர்வாகத்தால் கண்டுக்கொள்ளப்படாமல் இருந்த நிலையில், பல முயற்சிகளுக்கு பின்னர் அதிரை பேரூராட்சி சார்பில் இந்த ஆபத்தான பள்ளத்தை மூடும் பணி கடந்த ஜூலை 30 ஆம் தேதி தொடங்கியது. காங்கிரட் போடப்பட்டு சுமார் மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இது வரை இதற்கான பணிகள் முழுமையடையவில்லை.

கட்டபட்ட வாய்காலில் ஒரு ஆள் இறங்கும் அளவிளான குழி உள்ளது. இந்த குழியினால் பல இன்னல்கள் உண்டாக கூடும். இதனால் உயிர் சேதம் ஏற்பட்டால் பேரூராட்சி பொறுப்பேற்குமா?

மூடி அமைக்க மூன்று மாதம் தாமதமாகுமா? இது மக்களின் மீது பேரூராட்சிக்கு அக்கரை இல்லாததை காட்டுகிறது. நடவடிக்கை எடுக்கப்படுமா? இல்லை கிடப்பில் போடப்படுமா?