Adirai pirai
sports உள்ளூர் செய்திகள்

U-14 தமிழ்நாடு அணிக்கு தேர்வான அதிரை AFFA வீரர் ஆதிஃப்

அதிரையை சேர்ந்த AFFA கால்பந்து அணியின் இளம் வீரராக இருப்பவர் ஆதிஃப். காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் பயின்று வரும் இவர் இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அணிக்கான தகுதிச்சுற்றுப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 18 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளார். இதையடுத்து வரும் நவம்பர் 27ம் தேதி அசாம் மாநிலத்தில் நடைபெற உள்ள கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணிக்காக விளையாட உள்ளார்.

மாநில அணிக்காக தகுதிபெற்றுள்ள அதிரை வீரருக்கு அதிரை பிறையின் பாராட்டுக்களை தெரிவித்துகொள்கிறோம். கடந்த ஆண்டு 17 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அணியில் AFFA அணி வீரர் அபூபக்கர் தகுதிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.