Adirai pirai
articles உள்ளூர் செய்திகள்

அதிரை சாலைகளில் அடிபட்டு கிடக்கும் ஆடு, மாடுகள்… தீர்வு என்ன?

அதிரையில் பொதுமக்களின் வளர்ப்பு கால்நடைகள் சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரிகின்றன. இதனால் விபத்துகள் அதிகம் நடக்கின்றன. இதில் பொதுமக்களும், கால்நடைகளும் உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளனர். அதுமட்டுமின்றி கால்நடைகள் குப்பைத்தொட்டிகளை சேதப்படுத்தி குப்பைகளை பொது இடங்களில் இறைத்துவிடுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே கால்நடை வளர்ப்போர்கள் மேய்ச்சலுக்கு கால்நடைகள் வீதிகளில் சுற்றி திரிகின்றனவா என்பதை கண்காத்து வீடுகளில் கட்டி வளர்க்கவேண்டும். அதிரை பேரூராட்சி நிர்வாகத்தினர் சாலைகளிலும் தெருக்களிலும் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களை எச்சரிக்க வேண்டும், இதே நிலை தொடர்ந்தால் அபராதம் விதிக்கவேண்டும்.

கீழே உள்ள படங்கள்: இன்று அதிரையில் மாடு ஒன்று விபத்துக்குள்ளாகி கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது.