Adirai pirai
education and jobs உள்ளூர் செய்திகள்

வேலை தேடிக்கொண்டிருக்கும் அதிரை இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!

ரோட்டரி சங்கம் சார்பாக வரும் 17-11-2018 (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை திருவாரூர் வேலுடையார் கல்வி நிறுவன வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த 24 உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வுசெய்ய உள்ளனர். இதில் ஐடிஐ, 10, 12ம் வகுப்பு வரை படித்தவர்கள், பொறியியல், கலை, அறிவியல் படிப்புகளை படித்தவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வழங்கப்படும். 2,500 ஆண்கள், 1,750 பெண்கள் என மொத்தம் 4,250 பேருக்கு இந்த முகாமில் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு படத்தில் உள்ள அதிரை ரோட்டரி சங்க நிர்வாகிகள் எண்ணுக்கு தொடர்புகொள்ளவும்.