Adirai pirai
articles exclusive உள்ளூர் செய்திகள்

அதிரை ஜும்மாக்களில் தொடர்ந்து கைவரிசை காட்டிவரும் செருப்பு திருடர்கள்!

ஆண்டுகள் உருண்டோடிக்கொண்டிருக்கின்றன. அதிரையும், மக்களும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மாறி வருகின்றனர். ஆனால் இன்னும் நமதூரில் மாறாத சில கீழ்தரமான விசயங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் ஜும்மா பள்ளிவாசல்களில் நடைபெறும் செருப்பு திருட்டு. இறைவனது இல்லத்திற்கு தொழுகைக்காக வரும் மக்களின் செருப்புகளை கயவர்கள் வாராவாரம் திருடிச்செல்வது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இதற்கு எந்த ஜும்மாவும் விதிவிலக்கல்ல. செருப்பை தொலைத்தவர் புழம்பி தள்ளிவிட்டு புதிய செருப்பை வாங்கிச்சென்றுவிடுவார். ஆனால் மறு வாரம் வேறு சிலரது செருப்புக்கள் திருடப்படும். இதனால் ஜும்மாவுக்காக பழைய செருப்புக்களை வைத்திருப்பவர்களும் உள்ளனர். ஜும்மா தொழுகை முடிந்தவுடன் வாசலில் நின்று பார்த்தால் குறைந்தது 5 பேராவது வெறும் கால்களுடன் நடந்து செல்வதை காண முடிகிறது. இதனை தடுக்க என்ன தான் வழி? தடுக்க வழியில்லை என்றாலும் இந்த காரியத்தை செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் பல்வேறு வழிகள் உள்ளன. அதில் மிக முக்கியமான ஒன்று சிசிடிவி கேமரா. பள்ளிகளின் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களை அதிகம் திருட்டு நடைபெறும் காலணி வைக்கும் இடத்தில் பொருத்தினால் இதனை செய்வது யார் என்பதை கண்டுபிடித்து எச்சரிக்கலாம்.

இதன் மூலம் செருப்பு திருட வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களுக்கு அச்சம் ஏற்படும். தொழுகைக்காக வரும் மக்களும் நிம்மதியாக வாசலில் செருப்பை போட்டுவிட்டு வரும் நிலை உருவாகும். தமாம் நிகழ்ச்சி போன்ற வீணான சடங்குகளுக்கு லட்சக்கணக்கில் செலவழிக்கும் பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கு இது பெரிய செலவாக இருக்காது.