Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை செடியன் குளம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் தாஜுல் இஸ்லாம் சங்கத்தினர்!

நேற்று 09.11.2018 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியளவில் தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளின் அழைப்பின் பெயரில் மேலத்தெரு வாசிகளின் கலந்தாலோசனை கூட்டம் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தெருவின் முக்கியஸ்தர்கள், TIYA நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவுகள் பின் வருமாறு:

1. தாஜுல் சங்க நிர்வாகிகளால் கடந்த வருடங்களில் மரைக்காயர் மற்றும் செழியன் குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் இந்த வருடம் இதுவரை எடுத்து வருகிற நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. மேலும் நடக்க வேண்டிய அனைத்து காரியங்ககுக்கு அனைவரின் ஒத்துழைப்பையும் கோரப்பட்டது.

2. கடந்த 2015-ம் ஆண்டு சங்க நிர்வாகம் சார்பாக புதுக்குளத்தில் கலக்கும் கழிவுநீரை தடுத்து, அபுல் கடை அருகில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் இணைக்க ஒரு வாய்க்காலும், அதன் அருகிலுள்ள பாலத்தையும் சீர் செய்து தரக்கோரி பேரூராட்சி நிர்வாகத்திடம் அளிக்கப்பட்ட மனுவின் மீது உள்ளாட்சி அமைப்பினர்களோ, தற்போது இருக்கின்ற அதிகாரிகளோ எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதை சங்க நிர்வாகிகள் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்கள்.

3. கடந்த 2013-ம் ஆண்டு மரைக்காயர் குளத்திற்கு CMP வாய்க்காலில் தண்ணீர் கொண்டு வரும்போது, சிதலமடைந்த வாய்க்காலை சீர் செய்ய வலியுருத்தி பேரூராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தபோது, 10 பைப்புகள் வாங்கித்தர என பேரூராட்சி தலைவர் கேட்டார் என்றும், அதனை உடனே வாங்கி கொடுத்ததாகவும், ஆனால் 5 வருடங்கள் கழிந்த நிலையிலும் இதுவரை அந்த வாய்க்காலை பேருராட்சி நிர்வாகம் சீர் செய்து தரவில்லை என்ற தகவலையும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தார்கள்.

4. கடந்த காலங்களிலும் அன்மைகாலங்களிலும் குளங்களை முஹல்லாவே சீரமைத்து வந்துள்ளது என்றும், இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களிலும் குளங்களுக்கு தேவையான பணிகளை தாங்களே சீரமத்துக் கொள்வது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அந்த வகையில் இன்றைய தினம் முதல் கட்டமாக அண்டிய குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. இதனை சங்க நிர்வாகிகள் பார்வையிட்டனர்.