Adirai pirai
exclusive FLASH NEWS posts உள்ளூர் செய்திகள்

டெங்குவை ஊக்குவிக்கின்றதா அதிரை பேரூராட்சி?

அதிரை கடற்கரை தெருவின் முக்கிய பகுதிகளில் கழிவுநீர் வடிகால் சேதமடைந்தும், சில இடங்களில் அடைப்புகளும் ஏற்பட்டுள்ளது.

அதனை சீரமைத்து தரும்படி பல முறை அந்த முஹல்லா வாசிகள் அதிரை பேரூராட்சி நிர்வாகத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் முறையிட்டு பல முறை புகார் மனுக்களும் அளித்துள்ளனர்.

இது வரை எந்த ஒரு முறையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சங்கடத்திற்குள்ளாகி உள்ளனர். இந்த பகுதி மக்கள் முறையாக வரி செலுத்தவில்லையா? அல்லது வேறு எந்த காரணத்தால் புறக்கணிக்கப்படுகிறது? என்று தெரியவில்லை.

ஊரெங்கும் டெங்குவை ஒழிக்கிறோம் என்று கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த பேரூராட்சி அதிகாரிகள் தான் இந்த கடற்கரை தெரு பகுதியை புறக்கணித்துள்ளார்கள்.

விரைந்து நடவடிக்கை எடுக்க முன் வராத பட்சத்தில் எப்படி கழிவை அள்ளுவது என்று பேரூராட்சி அலுவலகத்தில் சாக்கடை நீரையும், குப்பையையும் கொட்டி சொல்லி கொடுக்கப் போவதாக கூறியுள்ளனர் இப்பகுதியினர்.

பேட்டி காண: https://m.facebook.com/story.php?story_fbid=544017609337012&id=436182423453865