Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

பட்டுக்கோட்டை டிஎஸ்பியுடன் அதிரை திமுகவினர் சந்திப்பு

பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளராக இருந்த செங்கமலக்கண்ணன் கும்பகோணத்துக்கு மாற்றப்பட்டு புதிய காவல்துறை துணை கண்காணிப்பாளராக கணேசமூர்த்தி அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அதிரை திமுக நகர தலைவர் இராம.குணசேகரன் தலைமையில், தஞ்சை மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் மரைக்கா இத்ரீஸ், முன்னாள் திமுக கவுன்சிலர் ஷரீப், மாவட்ட பிரதிநிதி ப.கு.பகுருத்தீன், முல்லை மதி உள்ளிட்டோர் புதிய டிஎஸ்பியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.