Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

பிலால் நகர் வாசிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற உள்ளது!

பிலால் நகர் ஜமாத் சார்பாக இன்று (12.11.2018) பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகளை சந்தித்து பிலால் நகரை மேம்படுத்துவது சம்மந்தமாக மனு அளிக்கப்பட்டது.

இதில் பிலால் நகரில் குப்பை அல்லாமல் இருப்பது குறித்தும். டெங்கு கொசு வராமல் தடுக்க கொசு மருந்து அடிக்க வலியுறுத்தியும். வாய்க்கால் சரி செய்து தர கோரியும், விரைவாக சாலை அமைத்து தர வலியுறுத்தியும் மனு வாயிலாகவும், நேரிடியாகவும் கூறியுள்ளனர்.

கொசு மருந்து அடிப்பதாகவும், குப்பை அள்ளுவதாகவும் உறுதிபட கூறியுள்ளனர் அதிகாரிகள். மேலும் பிலால் நகர் தெருவிற்கு மட்டும் வாய்கால் , சாலை அமைப்பதற்காக ரூ.4,800,000 ( நாற்பத்தி எட்டு லட்சம் ) ஒதுக்கி இருப்பதாகவும், இரண்டு மாதத்திற்குள் ரோடு , வாய்க்கால் அமைத்து தரப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.