Adirai pirai
உள்ளூர் செய்திகள்

பிலால் நகரில் நிலவேம்பு கசாயம் விநியோகம்!

அதிரையில் டெங்குவை தடுக்கும் விதமாக பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டது.

இன்று 13.11.2018 செவ்வாய்கிழமை பிலால் நகர் ஜமாத் சார்பாக அப்பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் என ஏராளமானோர் பருகி பயனடைந்தனர்.