Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரைக்கு நீர் தராமல் ஏமாற்றிய அதிகாரிகளை கண்டித்து இன்று சாலை மறியல் போராட்டம்!

தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதியான அதிராம்பட்டினம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் சுற்று வட்டார கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சம்பா சாகுபடி நடைபெறவில்லை. இந்த ஆண்டு கடந்த ஆகஸ்டு மாதம் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்ட தண்ணீர் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு சென்றன. ஆனால், அதிரை கடைமடை பகுதிகளில் உள்ள ஆறுகள், குளங்கள், பாசன வாய்கால்களில் தண்ணீர் சென்றடையவில் பொதுமக்கள், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் ஐநூறுக்கும் அதிகமான அதிரை மக்கள் ஒன்றுகடி சென்று மனு அளித்தனர். இருந்தும் எந்த முறையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டவில்லை. குளங்களுக்கு நீர் நிரப்பி தருவதாக கூறிய அதிகாரிகளின் வாக்குறுதி, காற்றில் கரைந்து போனது. இதனை கண்டித்து இன்று 14.11.2018 காலை 10 மணியளவில் அதிரை பேரூராட்சி அருகே ECR சாலையை மறியல் செய்து மாபெரும் போராட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து தெரு மக்களும் கலந்துகொள்ளுமாறு போராட்டக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.