Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையில் பதற்றம்!

அதிரையில் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை நடத்திய ஆலோசனை கூட்டம் இன்று செவ்வாய்கிழமை மஹ்ரிப் தொழுகைக்கு பின் 06.11.2018 அயிஷா மகளிர் அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் குளங்களுக்கு நீர் கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இன்று பேரூராட்சியை கண்டித்து 14.11.2018 ல் அதிரை ECசாலையை மறியல் செய்ய தீர்மானித்திருந்தனர்.

தற்போது பேரூராட்சி அலுவலகம் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பொதுமக்களை காவல்துறையினர் கலைந்து செல்லும் படி அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் சற்று பதற்றமாக காணப்படுகிறது. சாலை மறியலுக்கு காரணமாக இருந்தவர்களை காவல்துறையினர் பிடியில் இருக்கின்றனர்.