Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் 2 நாட்களாக செத்துக்கிடக்கும் நாயை கூட அகற்றாத செத்துப்போன பேரூராட்சி!

அதிரை காதிரி முஹைதீன் கல்லூரி எதிரில் கடந்த 2 தினங்களாக நாய் ஒன்று செத்து துர்நாற்றம் வீசுகிறது. இதை சிறிதும் பொருட்படுத்தாத பேரூராட்சி கண்டும் காணாமல் விட்டுள்ளது. இதன் மூலம் கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு நோய்கள் பரவ வாய்ப்புகள் உள்ளன. இது குறித்து சமூக ஆர்வலரும் முன்னாள் வார்டு கவுன்சிலருமான சேனா மூனா ஹாஜா முகைதீன் அவர்கள் பேரூராட்சிக்கு புகார் அளித்துள்ளார். இன்றாவது பேரூராட்சி நடவடிக்கை எடுக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.