Adirai pirai
INFORMATION உள்ளூர் செய்திகள்

சென்னை – தஞ்சை, மன்னார்குடி ரயில்கள் ரத்து

கடந்த 3 நாட்களாக கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த ‘கஜா’ புயல் இன்று (வியாழக்கிழமை) நிலப்பகுதியை நோக்கி வருகிறது. இந்த புயலானது பாம்பன் கடலூர் இடையே நாகை அருகே இரவு 11.30 மணியளவில் கரையைக்கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயல் பாதிப்பு மாவட்டங்களில் காற்றோ, மழையோ அதிகமாக இருந்தால், பாதுகாப்பு காரணங்களுக்காக மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.  அதேபோல், சென்னை எழும்பூர் – மன்னார்குடி விரைவு ரயில், காரைக்கால் விரைவு ரயில், உழவன் விரைவு ரயில்கள் இன்று ரத்து  செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.