Adirai pirai
INFORMATION உள்ளூர் செய்திகள்

அதிரை – சென்னை இடையே செல்லும் ஆம்னி பேருந்துகளின் சேவை இன்று நிறுத்தம்

கஜா புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக தஞ்சை மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, பொதுமக்களுக்கும் சில அறிவுறுத்தல்கள் தரப்பட்டுள்ளன.

இந்த புயல் கரையை கடக்கும் போது கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் 7 மாவட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் இல்லம் திரும்பிய பிறகு மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணி வரை அரசு மற்றும் தனியார் பேருந்துகளை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிரையிலிருந்து சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.