Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

அதிரை அருகே புயல் நிவாரண முகாம்களில் எம்.எல்.ஏ சேகர் ஆய்வு!

கஜா எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து அதிரை அருகே ஏரிப்புறகரை, நரசிங்கபுரம், ராஜாமடம் பகுதியில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் ஆய்வு செய்தார். அப்பகுதியில் உள்ள நிவாரண முகாம்களுக்கு சென்ற எம்.எல்.ஏ மக்களுக்குறிய தேவைகளை கேட்டறிந்து அவர்களுக்கு மருத்துவ வசதிகள், சாப்பாடு போன்ற ஏற்பாடுகளையும் உதவி பொருட்களை வழங்கினார். அத்துடன், புகார்களை தெரிவிக்க மக்களிடம் கைபேசி எண்ணை அவர் பகிர்ந்துகொண்டார்.