Adirai pirai
CLIMATE உள்ளூர் செய்திகள்

அதிரையை அதிகாலை 4 – 6 மணிக்குள் கஜா புயல் நெருங்க வாய்ப்பு

கஜா புயல் இன்னும் சில மணி நேரத்தில் நாகையில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக தஞ்சை மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, பொதுமக்களுக்கும் சில அறிவுறுத்தல்கள் தரப்பட்டுள்ளன.

இந்த புயல் கரையை கடக்கும் போது கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே விண்டீ என்ற இணையதளத்தில் கிடைத்த தகவலின் படி கஜா புயல் வெள்ளிக்கழமை அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் நெருங்க வாய்ப்பு இருப்பதாக காட்டியுள்ளது.