Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

தமிழகத்திலேயே அதிரையில் அதிகபட்சமாக 111 கி.மீ., வேகத்தில் வீசிய காற்று

கஜா புயல் இன்னும் சற்று நேரத்தில் முழுமையாக கரையை கடக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில் அதிரையில் சுமார் 12 மணியில் இருந்தே பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மரங்கள் முறிந்து விழும் அபாயகரமான சூழல் நிலவி வருகின்றது. சமூக ஆர்வலர்கள், இயக்கங்களை சேர்ந்தவர் என பல தரப்பற்ற ஆர்வலர்கள் முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். அரசு சார்பில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கஜா புயலின் போது அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 111 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாக தெரிவித்துள்ளது. அதிகம் பாதிக்கப்படும் என அஞ்சப்பட்ட நாகையில் 100 கி.மீ வேகத்திலும் காரைக்காலில் 74 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசியுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.