Adirai pirai
exclusive FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையை நடுங்க வைத்த “கஜா” புயல் – கள ஆய்வு.! (Exclusive)

அதிரையில் கஜா புயலின் தாக்கம் நேற்றிரவில் இருந்தே காணப்பட்டது. சுமார் 12 மணி முதல் பலத்த காற்றுடன் பலத்த மழை பெய்து வந்தது.

அதிரையில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தது. மிஸ்கீன் பள்ளியின் மனோரா இடிந்து விழுந்துள்ளது. பல வீடுகள் நாசமானது.

இடிந்து விழுந்த பள்ளிவாசல் மனோரா:

களப்பணிகள்:

இரவு முழுவதும் தகர கூரைகளின் சத்தம் காதை கிழித்தது. தகரங்கள் காற்றில் அடித்து செல்லப்பட்டது. வீதியெங்கும் மரங்கள் சாய்ந்து கிடந்தன.

சமூக ஆர்வலர்கள், இயக்கங்களை சேர்ந்தவர்கள் என பல தரப்பற்ற ஆர்வலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மின்கம்பங்கள் சாலையில் சாய்ந்து விழுந்துள்ளது.

தாழ்வான பகுதிகளில் இருந்த மக்களை மண்டபங்களில் தங்க வைத்திருக்கின்றனர். இயல்பு நிலைக்கு திரும்ப குறைந்தது சுமார் ஒரு வார காலமாவது ஆகலாம் என கூறப்படுகிறது.

அதிரையின் நிலை:

Gaja Cyclone