Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

மீண்டும் மெழுகுவர்த்திக்கு மாறிய அதிரை!

கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த காற்றின் தாக்கத்தால் பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தது. இதனால் இன்று அதிகாலையில் இருந்தே மின்சார சேவை துண்டிக்கப்பட்டது.

இன்வெர்ட்டர் வைத்திருந்தவர்கள் வீடுகளும் தற்போது இருள் சூழ்ந்தது. தற்சமயம் மெழுகுவர்த்திக்காக கடைகளில் அலை மோதுகின்றது மக்கள் கூட்டம்.