Adirai pirai
உள்ளூர் செய்திகள் தமிழகம்

அதிரையில் நிவாரண பணிகள் மந்தம்… பொதுமக்கள் சாலை மறியல்!

கோடூரமான கஜா புயலால் அதிரையில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. வீட்டின் கூரைகள், அஸ்பர் ஷீட்கள் , சன்சைட்டுகள் உடைந்து விழுந்தன. மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளதால் மின்சாரம் முழுவதுமாக தடைப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பிலால் நகர், கரையூர் தெரு பகுதியில் முழுவதுமாக தண்ணீர் சூழ்ந்துள்ளது. அப்பகுதி மக்கள் வீடுகளை இழந்து செய்வதறியாது தவித்து வருகின்றனர். முறிந்து விழுந்த மரங்களை இளைஞர்கள், தன்னார்வலர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர். சேதங்கள் பல கோடிக்கணக்கில் இருக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த சூழலில் அரசு தரப்பில் செய்யப்படும் நிவாரண பணிகள் அதிரையில் மந்தமாக நடைபெறுவதாக கூறி பேரூராட்சிக்கு பூட்டுபோட்டு பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.