Adirai pirai
Gaza relief உள்ளூர் செய்திகள்

அதிரையில் இலவசமாக தண்ணீர் கிடைக்கும் இடங்கள்!

கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக அதிரையில் பொதுமக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். இhந்த சந்தர்பத்தை பயன்படுத்தி பலர் அநியாயமான கட்டணத்தில் ஜெனரேட்டர்களை வாடகைக்கு விட்டு வருகின்றனர். இந்த சூழலில் நமக்கு கிடைத்த தகவலின் படி 3 இடங்களில் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

  1. பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அதிரை இமாம் ஷாபி பள்ளியில் ஜெனரேட்டர் உதவியுடன் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
  2. அதிரை பேரூராட்சி முன்னாள் தலைவர் அஸ்லம் அவர்களின் வீட்டில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
  3. அதிரை காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள அரசு சமுதாயக்கூடத்தில் குடிநீர் கிடைக்கிறது.
  4. அதிரை போஸ்ட் ஆபிஸ் ரோடு மாஸ் ரெடிமேட்ஸ் அருகே தண்ணீர் லாரியில் விநியோகிக்கப்படுகிறது.

இதுபோல் உங்களுக்கு தெரிந்த மக்களுக்கு பயனுள்ள தகவல்களை அதிரை பிறையில் பகிர வேண்டுமென்றால் கீழ்காணும் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி வைத்திடுங்கள்.

9597773359