Adirai pirai
articles FLASH NEWS உள்ளூர் செய்திகள்

கஜா புயல் தாக்கிய அதிரை – நடந்தது, நடப்பது என்ன?

அதிரையில் கஜா புயலின் தாக்கம் கடந்த 15ஆம் தேதி இரவில் இருந்தே காணப்பட்டது. பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது.

இதனால் சாலையில் கிடந்த மரங்களை பொதுமக்களும், தமுமுக, SDPI, TNTJ, MJK, CBD யை சேர்ந்த இயக்க, அமைப்பினர்கள் களப்பணி ஆற்றி வருகின்றனர். அரசு தரப்பில் முறையான எந்த ஒரு சலுகைகளும் அதிரை மக்களுக்கு கிடைக்கப்படவில்லை.

துப்புரவு பணியாளர்கள் சாலையோரம் கிடக்கும் மரங்களை அகற்றி வருகின்றனர். ஆனால் பல பகுதிகளில் பொதுமக்களே மரங்களை அகற்றி வருகின்றனர்.

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் CV சேகர் மக்களை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என மக்கள் சாலை மறியல் செய்தனர். இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.

ஒரு சில புகைப்படங்கள் இந்த மூன்று நாட்களாக எடுக்கப்பட்டது:

மழவேனிற்காடு:

நேற்று நடந்த சாலை மறியல்: