Adirai pirai
posts

அதிரையில் கனமழை

அதிராம்பட்டினத்தில் தன்னார்வலர்கள், பொதுமக்கள், இயக்கங்கள், பொதுநல அமைப்புகளின் துணையுடன் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை இன்று காலை ஓய்ந்திருந்த நிலையில் தற்போது கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் பணிகள் தொய்வடைந்துள்ளன.