Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் சிறப்பான களப்பணியால் சிலிர்ப்பூட்டும் சிறுவர்கள்!

அதிரையில் கஜா புயலின் தாக்கம் கடந்த 16ஆம் தேதி இரவில் இருந்தே காணப்பட்டது. பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது.

இதனால் சாலையில் கிடந்த மரங்களை பொதுமக்களும், தமுமுக, SDPI, TNTJ, MJK, CBD யை சேர்ந்த இயக்க, அமைப்பினர்கள் களப்பணி ஆற்றி வருகின்றனர். அரசு தரப்பில் முறையான எந்த ஒரு சலுகைகளும் அதிரை மக்களுக்கு கிடைக்கப்படவில்லை.

மின்வாரிய பணியாளர்கள் உயிரை பணயம் வைத்து மின்சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு இணையாக அதிரையை சேர்ந்த சிறுவர்களும் களப்பணிகள், நிவாரணப்பணிகளில் தங்கள் சக்திக்கு மீறி உழைத்து வருகின்றனர். நிவாரண பொருட்களை இறக்கி வைப்பது, பொட்டலம் போடுவது, வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்வது என பல பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர். வீடுகளுக்குள் அமர்ந்து வாட்ஸ் அப்பில் மட்டும் வாய்ச்சவடால் விடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் இவர்களின் இந்த பணி பலரை வாய்ப்பிழக்க வைத்துள்ளது.