Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை கரையூர் தெருவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு SDPI கட்சி சார்பில் நிவாரண உதவி!

அதிரையில் கஜா புயலின் தாக்கம் கடந்த 16ஆம் தேதி இரவில் இருந்தே காணப்பட்டது. பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது.

இதனால் சாலையில் கிடந்த மரங்களை பொதுமக்களும், தமுமுக, SDPI, TNTJ, MJK, CBD யை சேர்ந்த இயக்க, அமைப்பினர்கள் களப்பணி ஆற்றி வருகின்றனர். அரசு தரப்பில் முறையான எந்த ஒரு சலுகைகளும் அதிரை மக்களுக்கு கிடைக்கப்படவில்லை.

இந்த நிலையில் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான கரையூர் தெருவில் SDPI கட்சியினர் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.