Adirai pirai
posts

அதிரையில் கஜா புயலால் அநியாய விலைக்கு பொருட்கள் விற்பனை!

அதிரையில் கஜா புயலால் பொருட்களின் விலை தாறுமாறான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

நமதூருக்கு வரக்கூடிய சாலைகளில் பெரிதளவில் பாதிப்பு ஏதும் இல்லை. இருந்தாலும் வேறு வாகனத்தில் எடுத்து வருவதால் விலை உயர்த்தப்பட்டிருக்கிறதென்று கூறுகின்றனர் வியாபாரிகள்.

ஒரு சில பொருட்கள் விலை உயர்ந்திருக்கலாம், ஆனால் இதை ஒரு காரணம் காட்டி அநியாயமாக மற்ற பொருட்கள் விற்பனை செய்வது மிக கேவலமான ஒன்று.

பல ATM மையங்களில் பணங்கள் கிடைப்பதில்லை. அத்தியாவசிய தேவைக்கு சிரமம்த்திற்கு பிறகே தேவைகள் நிறைவேறுகின்றது. இந்த நிலையில் அநியாய விலை வியாபாரிகள் இத்தகைய செயல் மிக கொடூரமானதாக இருக்கின்றது.

100 சதவீதம் ஒருவர் வேண்டுமெறே அநியாய விலைக்கு விற்பனை செய்கிறார் என்று தெரிந்தால்.

இப்போதைக்கு நாம் அவர்களை (அதிக விலை வியாபாரிகளை) பயன் படுத்தி கொள்ளலாம். இயல்பு நிலைக்கு மாறும் சமயத்தில் நாம் அது மாதிரியான கடைகளை புறக்கணிப்போம்.