Adirai pirai
exclusive FLASH NEWS உள்ளூர் செய்திகள்

கஜா புயலால் அதிராம்பட்டினத்திற்கு பாதிப்பு இல்லையா? பரவும் வதந்தி.!

கஜா புயலால் அதிராம்பட்டினம் மக்களுக்கு பாதிப்புகள் ஏதும் இல்லை என்பது போல் வதந்திகள் பரப்பப்படு வருகிறது.

இன்றைய சூழலில் அதிரை மக்களில் பெரும்பாலானோருக்கு உணவு தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகளை இஸ்லாமிய அமைப்புகளும், இயக்கங்களும் வழங்கி வருகின்றனர்.

ஆனால் அரசு சார்பில் எந்த ஒரு நலத்திட்டமும் அதிராம்பட்டினத்திற்கு கிடைக்கவில்லை. MLA C.V.சேகர் இதுவரை ஊருக்குள் இருக்கும் மக்களின் குறைகளை கேட்கவில்லை.

இந்த நிலையில் அதிரை வசதி படைத்தவர்கள் அதிகளவில் இருப்பதாகவும் இங்கு இயல்பு நிலை ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றது.

அதிரையர்களுக்கு உணவு, தண்ணீர் ஓரளவு கிடைத்தாலும். இதை அரசு வழங்கவில்லை தன்னார்வ இஸ்லாமிய அமைப்புகள் வழங்கி வருகின்றனர். அவர்கள் இழந்த வீடுகள், மரங்கள், தகர கூரைகள் போன்றவற்றிக்கான இழப்பீட்டை யார் ஈடுசெய்வது. பல கோடி ரூபாய் இழந்த நிலையில் அதிரை மக்கள் உள்ளனர். இதற்காக முறையான எந்த ஆய்வும் அரசு எடுக்கவில்லை.

தோப்புகளை நம்பி இருந்தவர்களின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகி போனது.?

ஓட்டு வாங்க இரவு பகலாக சாக்கடை சவதி பக்கம் நடையாய் நடந்த அரசியல்வாதிகள். இனியாவது அதிரையின் பக்கம் செவி சாய்பார்களா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

வீடியோ விரைவில்…