Adirai pirai
#PiraiPixels உள்ளூர் செய்திகள்

கஜா புயலால் அதிரையில் வெளிப்பட்ட சகோதரத்துவம்!

அதிரையில் கஜா புயலின் தாக்கம் கடந்த 16ஆம் தேதி இரவில் இருந்தே காணப்பட்டது. பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சாலையில் கிடந்த மரங்களை பொதுமக்களும், தமுமுக, SDPI, TNTJ, MJK, CBD யை சேர்ந்த இயக்க, அமைப்பினர்கள் களப்பணி ஆற்றி வருகின்றனர்.

இதில் பல்வேறு நெகிழ்ச்சியான சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் ஒன்று அதிரை ஜாவியால் அருகே உள்ள தமுமுகவின் மனிதநேய ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தின் பெயர் பலகை கஜா புயலால் கீழே விழுந்து கிடந்தது. இதனை பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த களப்பணியாளர்கள் தூக்கி நிறுத்தினர். இந்த காட்சி பலருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.