Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

முத்துப்பேட்டையில் மதவாதிகளை மிரள வைத்த மதநல்லிணக்கம்!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் TNTJ அமைபை சேர்ந்த இஸ்லாமியர்கள் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டனர். அப்போது இஸ்லாமியர்களை இந்து மத மக்கள் தங்கள் கோவிலுக்குள் அழைத்து உணவு பரிமாறினர். இதில் அர்ச்சகர் ஒருவர் இஸ்லாமியர்களுக்கு உணவு பரிமாறும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதே போல் அங்குள்ள பள்ளிவாசல்களிலும் மத வேறுபாடின்றி உணவுகள் மற்றும் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மதக்கலவரங்களுக்கு பெயர் போன முத்துப்பேட்டையில் நடைபெற்ற இந்த மதநல்லிணக்க நிகழ்வு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.