Adirai pirai
Gaza relief உள்ளூர் செய்திகள்

அதிரை முத்தம்மாள் தெரு மக்களுக்கு உதவிடுவோம்!

அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவில் வசித்துவரும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைத்து வருகிறது. மேலும் அந்த தெருவில் அதிகம் உள்ள கூரை வீடுகளும் ஓட்டு வீடுகளும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மழை தொடர்ந்து பெய்து வருகின்ற நிலையில் இருக்க இடம் இல்லாமல் மக்கள் சிறு குழந்தைகளுடன் தவித்து வருகின்றனர். மக்கள் பயன்பெறும் வகையில் வீடுகளின் மேல் தார்பாய் போடுவதற்கு வழியில்லாத சூழ்நிலையில் உள்ளனர். எனவே அப்பகுதி மக்கள், தன்னார்வலர்களின் உதவியை நாடியுள்ளனர். உதவ முன்வரும் நெஞ்சங்கள் கீழ்காணும் எண்களுக்கு தொடர்புகொண்டு அழைக்கலாம்.

சரண் : 9626789226
ராகேஷ் : 7904075098