Adirai pirai
Gaza relief help உள்ளூர் செய்திகள்

வீடுகளை இழந்து வீதியில் நிற்கும் அதிரை பிலால் நகர் மக்களுக்கு உதவுவோம்!

வங்கக் கடலில் உருவான கஜா புயல் கடந்த 16 ம் தேதி அதிகாலை முழுவதுமாக கரையைக் கடந்தது. அப்போது அதிக பட்சமாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 111 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் ஒட்டுமொத்த அதிராம்பட்டினமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சாலைகள் முழுவதும் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் வேறோடு சாய்ந்தன. பொதுமக்கள் வீடுகளை இழந்துள்ளனர். மின் இணைப்புகள், தொலைத்தொடர்புகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. தற்போது இளைஞர்கள், தன்னார்வலர்களின் பெரும் முயற்சியால் அதிரை மீண்டு வருகிறது. அதிராம்பட்டினமே இந்த நிலைக்கு தள்ளப்பட்டால், சிறிய மழைக்கு கூட தாங்காத பிலால் நகரிந் நிலையை சொல்லவா வேண்டும். 300 குடும்பங்களை கொண்ட பிலால் நகரில் பெரும்பாலானவர்கள் ஏழை தொழிலாளர்கள். குடிசை வீடுகளால் நிறைந்து காணப்படும் இந்த பிலால் நகரில் கஜா புயலால் 100க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. இவர்கள் உதவிட முன்வருமாறு பிலால் நகர் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.