Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையில் கஜா புயலால் பாதிப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய தேசிய துணைத்தலைவர்.!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தரப்பு சமூக ஆர்வலர்கள், இயக்கத்தை சேர்ந்தவர்கள் பலர் அரசால் கைவிடப்பட்ட பல பகுதிகளுக்கு நேரில் சென்று உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கியும், சாலையில் கிடக்கும் மரங்களை அகற்றுவது போன்ற பல சேவைகளை செய்து வருகின்றனர்.

இன்று SDPI கட்சியின் தேசிய துணைத்தலைவர் தெஹ்லான் பாக்கவி அதிராம்பட்டினம் மக்களுக்கு நிவாரண பொருட்களை விநியோகம் செய்தார். கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.