Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்ணீர் விநியோகித்த PFI வாகனம் விபத்துக்குள்ளானது

கஜா புயலின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட அதிராம்பட்டினம் மக்கள் தண்ணீர் இன்றி கடும் சிரமங்களை சந்தித்து வந்தனர். இவர்களுக்கு உதவும் வகையில் அதிராம்பட்டினத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் வேண் மூலம் இலவசமாக தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனால் மக்கள் பெரிதும் பயனடைந்தனர். இந்த நிலையில் இந்த வாகனம் இன்று விபத்துக்குள்ளானது. இதில் வாகன ஓட்டுனர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.